முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா, இந்தியா, கனடா உள்பட பல்வேறு நாடுகள் அதிக இறக்குமதியை விதிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறினார்.

அதன்படி, சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் என பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள நாடுகள் முன்வந்ததை அடுத்து, வரி வகிதம் சராசரியாக 10% ஆக குறைக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான பேச்சுவார்த்தைகளில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்த மே 12ம் தேதியிட்ட ஆவணத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சில பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி வைப்பது அல்லது அவற்றின் மீதான வரிகளை அதிகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து