முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க ரஞ்சி கோப்பை மும்பை அணிக்காக களமிறங்குகிறார் சூர்யகுமார் யாதவ்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      விளையாட்டு
Suryakumar-Yadav 2022 1

Source: provided

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க மும்பை ரஞ்சி அணியில் களமிறங்குகிறார் சூர்யகுமார் யாதவ்.

77 ஆட்டங்களில்...

32 வயது சூர்யகுமார் யாதவ், நெ.1 டி20 பேட்டராக உள்ளார். இந்திய அணிக்காக 16 ஒருநாள், 42 ஒருநாள் ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளார். 77 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யகுமாரின் கனவு, இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவது. இதற்காக 2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாட முடிவெடுத்துள்ளார். இதையடுத்து ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றுள்ளார். 

2-வது ஆட்டத்தில்...

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு காரணமாக சூர்யகுமார் இடம்பெறவில்லை. இதையடுத்து மும்பை ரஞ்சியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள சூர்யகுமார், ஹைதராபாத்துக்கு எதிரான மும்பையின் 2-வது ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார். 

கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யகுமார். எனினும் டெஸ்டில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து