முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அம்பேத்கரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 12 -09

மதுரை பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாந்கராட்சி கூட்டரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். அதன் பின்னர் மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்வரின் வருகையையொட்டி மதுரை, மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து