முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு:

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      அரசியல்
Premalatha 2023 01 23

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட உள்ளது. தே.மு.தி.க. சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தே.மு.தி.க. தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். சில நேரங்களில் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். தற்போது தே.மு.தி.க. எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2011-ம் ஆண்டு தே.மு.தி.க. வென்ற தொகுதி ஈரோடு கிழக்குத் தொகுதி.

இடைத்தேர்தலை இவ்வளவு சீக்கிரம் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் இறந்த சுவடு கூட மறையவில்லை. அதற்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் 3 மாதத்திற்கு பிறகு இந்த இடைத் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அறிவித்தது, அறிவித்தது தான். எனவே தே.மு.தி.க. தனித்து களம் காண்கிறது.

பாஜக இன்னும் நிலையை அறிவிக்கவில்லை. அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து உள்ளன. அவர்களுக்கு சின்னம் உள்ளதா, இல்லையா என்ற கேள்வி உள்ளது. அவர்களும் நிலையை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தே.மு.தி.க. தனித்து களம் காண்கிறது" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து