முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி-20 சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு : சிறந்த வீராங்கனையாக தஹிலா மெக்ராத் தேர்வு

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      விளையாட்டு
Suryakumar 2023 01 25

Source: provided

மும்பை : ஆடவர் டி-20 கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வாகியிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. சிறந்த டி20 வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1578 ரன்கள்...

32 வயது சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 20 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 45 டி20 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 1578 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 180.34. இதுவரை 92 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2022-ல் 31 ஆட்டங்களில் விளையாடி 2 சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 187.43. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் எடுத்தார். 

900 புள்ளிகளை...

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார்.  இந்நிலையில் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவை அறிவித்துள்ளது ஐசிசி. 

ஆஸி., வீராங்கனை...

2022ம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட்டின் சிறந்த பெண் வீராங்கனையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தானின் நிடா டார், நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத் மற்ற மூவரையும் வீழ்த்தி 2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை கைப்பற்றினார். இவர் 2021ம் ஆண்டு தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தான் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீபியா வீரர் தேர்வு...

இதேபோல், அசோசியேட் நாடுகளில் சிறந்த வீரராக நமீபியாவின் ஹெகார்ட் எராஸ்மஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அசோசியேட் நாடுகளில் சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அரபு அமீகரகத்தின் ஈஷா ஓசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து