முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை சிற்றுண்டி: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
CM 20221 02 02

Source: provided

வேலூர்: வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். 

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று காந்தி நகர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இதையடுத்து, அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு சென்று சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து