Idhayam Matrimony

மாசித்திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் தேரோட்டம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2023      ஆன்மிகம்
thiruchendur

திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 

திருச்செந்தூரில் மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப். 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. முதலில் பிள்ளையார் தேரும், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தார். அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து