Idhayam Matrimony

கனடாவில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023      உலகம்
Gun 2023 01 05

Source: provided

ஒட்டாவா : கனடாவில் துப்பாக்கிச்சூட்டில்  2 போலீஸ் அதிகாரிகளை  சுட்டுக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிகாரிகள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறும்போது, 

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து