முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டாக முடக்கப்பட்ட டிரம்பின் வலைதள பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      உலகம்
Trump 2023 03 05

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்து ஜோபைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார். 

தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். 

அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. 

இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூ.டியூப் பக்கங்கள் நேற்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டிரம்ப் தனது பேஸ்புக், யூ.டியூப் பக்கங்களில் நான் திரும்ப வந்து விட்டேன் என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து