எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு நேற்று முன்தினம் விசாரித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22-ம் தேதி வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு தொடர்பாக வழக்கறிஞர் ராஜலெட்சுமி ஆஜராகி நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு சம்மதம் தெரிவித்தார். ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைந்து ஓ பன்னீர்செல்வத்தின் மனுவும் நாளை விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025