முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அப்பல்லோவில் கனிமொழியின் கணவர் அனுமதி

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Kanimozhi 2023 03 22

Source: provided

சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தன். இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கனிமொழி அங்கு சென்று, கணவரை உடன் இருந்து கவனித்து வந்தார். அதை தொடர்ந்து அரவிந்தன் தமிழகத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற இருக்கிறார். இதற்காக அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

 

அவருக்கு டாக்டர்கள் குழுவினர் பல்வேறு பரிசோதனைகளை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். அரவிந்தனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதால், வேகமாக குணமடைந்து வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து