முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
Vijay-1 2025-07-30

Source: provided

சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய். செயலியில் ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 5 பேரை சேர்க்கலாம். பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு ஒடிபி-யும் கேட்கபடாது என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீட்டு விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது:- தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967, 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அது போல, 2026 தேர்தலும் அமையும். 1967,1977, ஆகிய ஆண்டு தேர்தல்கள் திருப்புமுனையாக அமைந்தன. 2026 தேர்தலில் மாற்றம் வரும்.

மக்களுடன் செல், மக்களுடன் வாழ் என அண்ணா கூறியதை சரியாக செய்தாலே போதும். அண்ணா வழியில் செல்வோம். வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு எல்லோரையும் சந்தித்தவர்களே ஜெயித்தனர். மக்களிடம் செல்வோம், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம். நாம் இருக்கிறோம், நம்முடன் மக்கள் இருக்கிறார்கள், இதற்கு மேல் என்ன வேண்டும். அடுத்தது மதுரை தவெக மாநாடு, மக்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. இதற்கு பின் மக்களோடு மக்களாகதான் நாம் இருக்கப்போகிறோம். அதற்காக திட்டமிடுங்கள். இனி மக்களுடன் தான் எனது பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து