முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாத ரூ. 300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் உள்ளது. 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் (தமிழ் புத்தாண்டு 2023) வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று 27-ம் தேதி காலை 11 மணி முதல் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  மேலும் பக்தர்கள் www. http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து