முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எல்லைகள் நாளை சீல் வைப்பு : காவல்துறை தகவல்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி : ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. 

இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 28-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என மஹிலா பஞ்சாயத் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் நாளை 28-ம் தேதி பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும், எல்லையில் சீல் வைக்கப்படும் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் எனவும், பாராளுமன்றத்திற்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து