முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் : அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 04 01

Source: provided

சென்னை : பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள  இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று
அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள்(பால்பதம்) கீழ்க்கண்ட 7 உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்விவரம், 1. தொடக்க கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உறுப்பினர் கல்வி, கறவை மாடு வாங்க கடன் பெற உதவுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2. செயல்படாமல் உள்ள சங்கங்களின் (Dormant Societics) செயல்பாட்டின்மைக்கு உரிய காரணங்களை கண்டறிந்து அச்சங்கங்களை புத்துயிர் ஊட்ட நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
3. துணைப் பதிவாளர்கள் (பால்வளம்), (EO,SI,CSR) தங்களது மாவட்டத்தில் பால் உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து புதிய பால் கூட்டுறவு
சங்கங்களை உருவாக்கி பால் வரத்தினை அதிகப்படுத்த வேண்டும் மேலும் இதுவரை சங்கம் அமைக்கப்படாத அனைத்து வருவாய் கிராமங்களிலும்
உடனடியாக விவசாயிகளை தொடர்பு கொண்டு சங்கம் அமைக்க வேண்டும்.
4. சங்கங்களிலிருந்து பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாலுக்கான தொகையினை கால தாமதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய நேரத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும்.
5. அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களுக்கு பயன்படும் கால்நடை பராமரிப்பு விவரங்கள், நோய் பாதுகாப்பு விவரங்கள் மற்றும் திட்டங்களை சுவரொட்டிகள்
மூலம் காட்சிப்படுத்த வேண்டும்.
6. உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை தீவனம், மினரல் மிக்ஸர் தீவன விதை போன்றவைகளை தேவையான அளவில் இருப்பு வைத்து உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.
7. பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து