முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிருக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர்: தெலுங்கானாவில் சோனியா காந்தி வாக்குறுதி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
sonia-gandhi

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் பொது பேரணியில் பங்கேற்ற சோனியா காந்தி, மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். 

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஐதராபாத் நகரில் பொது பேரணி ஒன்றில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவரான சோனியா காந்தி நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். அவர் பேசும்போது, 

தெலுங்கானாவில் உள்ள மகளிர் நலனுக்காக மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் நிதி உதவியாக ரூ.2,500 வழங்கப்படும்.  சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். தெலுங்கானா முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள திட்டம் கொண்டு வரப்படும்.  தெலுங்கானா மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாங்கள் 6 உத்தரவாதங்களை அளிக்கிறோம். ஒவ்வொன்றையும் நிறைவேற்ற முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என அவர் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, சக்தி திட்டத்தின் கீழ் மகளிருக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான சலுகைகளை வழங்கி உள்ளது. இதற்காக அரசு சார்பில் பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து