முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமான் வழக்கு போடட்டும்: விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோவால் மீண்டும் பரபரப்பு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Vijayalakshmi 2023-08-28

Source: provided

பெங்களூரு : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்தார். சீமானை கைது செய்ய வைக்காமல் இங்கிருந்து செல்ல மாட்மேன் என்று சவால்கள் விட்டெறிந்தார். சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தார். சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, செய்தியளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார்.

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையே, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார். இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

இதுதொடர்பாக பேசிய விஜயலட்சுமி, "தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்" எனவும் தெரிவித்தார். இந்நிலையில், பெங்களூருக்கு சென்ற நடிகை விஜயலட்சுமி, " சாட்டை முருகன் தான் ரூ.50 ஆயிரம் வழங்கி தன்னை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார் என்று பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், " சாட்டை துரைமுருகன் ஏற்பாடு செய்த வழக்கறிஞரை கொண்டுதான் புகாரை வாபஸ் பெற்றேன். இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் சீமான் நீங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள். நான் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு வந்து நிரூபிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து