முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      விளையாட்டு
Afghanistan-team 2023-09-26

Source: provided

புதுடெல்லி : 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்கான் அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா சாஹிதி கேப்டனாக இருக்கிறார். இவர் தவிர ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சாட்ரான், ரியாஸ் ஹாசன், ரகமது ஷா, நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகிள், அசமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரகுமான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து