எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் அரங்கேறியது. இதில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.
இந்நிலையில் போட்டியின் முடிவில் சுனில் கவாஸ்கர் பேசியதாவது., "நான் சோகமாக இருக்கலாம். ஆனால் இந்த வலுவான இந்திய அணிக்காக நான் பெருமைப்படுகிறேன். சில நேரங்களில் சில அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக செல்லாது. ஆனால் இந்திய அணியினர் இந்த தொடரில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். எனவே இந்த அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை" என்று கூறினார்.
______________
விராட் கோலிக்கு தங்கப்பதக்கம்
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
______________
உலகக்கோப்பை வழங்கிய பிரதமர்
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இதனிடையே, உலகக்கோப்பை இறுதிப்போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை பிரதமர் மோடி வழங்கினார். இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு ஆகியோர் உலகக்கோப்பையை வழங்க அதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெற்றுக்கொண்டார்.
______________
பாட் கம்மின்ஸுக்கு புகழாரம்
ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணி டாஸ் ஜெயித்தபோது பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால், அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக பனிப்பொழிவு இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். பனிப்பொழிவு இருக்கையில் பந்துவீசுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து சாதுரியமாக பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு தவறான முடிவுகளையும் எடுக்கவில்லை. சரியான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட்டினை எடுத்தார். பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷை அருமையாகப் பயன்படுத்தினார். பாட் கம்மின்ஸ் பந்துவீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர் அணியை வழிநடத்திய விதம் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான பங்களிப்பு என அனைத்துத் துறைகளிலும் அசத்தினார் என்றார்.
______________
இந்திய அணிக்கு சச்சின் பாராட்டு
நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்தச் சூழலில் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். கிரிக்கெட்டின் மிக முக்கியமான உலக கோப்பை இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
திறமையான ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, ஒரு மோசமான நாள் பலரின் இதயங்களை நொறுக்கி விட்டது. இந்திய வீரர்கள், ரசிகர்கள் எவ்வளவு வேதனையையும், கஷ்டத்தையையும் அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது. தோல்விகள் விளையாட்டின் ஒரு பகுதிதான். அதேநேரத்தில் கோப்பையை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி, இந்தத் தொடர் முழுமைக்கும் சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |