முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மத்திய அரசு விருது : டெல்லியில் இன்று வழங்கப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Udhayanidhi-2

Source: provided

சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது டெல்லியில் இன்று வழங்கப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

இந்த அங்கீகாரம், தமிழகத்தில் விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர் கார்ட் கருத்தரங்கத்தின் 8-வது பதிப்பு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து