முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் : வருவாய்த்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
KKSSR 2023 04 01

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் எதிரொலியாக இன்று வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் எனவும் நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம்  எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், தேவையான முன்னேற்ற நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.   தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளது. 

பொதுமக்கள் அவசியமின்றி இன்று வரை வெளியே வரவேண்டாம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.  நீர்நிலைகள், முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

மேலும் இரவு நேரங்களில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று உத்தரவிட்டு இருப்பதாகவும், நெற்பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு வந்திருக்கிறது, மழை முடிந்த பிறகு முழுவதுமாக கணக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து