முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வியின் விரக்தியை பார்லி.,யில் காட்ட வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று காலை எதிர்க்கட்சிகளைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை பாராளுமன்றத்திற்குள் கொண்டுவர வேண்டாம் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.  சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூற வேண்டுமானால், எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு. தோல்வியின் விரக்தியை வெளிக்காட்டுவதற்கான  திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக எதிர்மறையாகவே செயல்பட்டு வரும் அவர்கள் நேர்மறையாக முன்னேறினால், நாடு அவர்களைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ளும். அவர்களுக்கு ஒரு புதிய கதவு திறக்கப்படலாம். அனைவரின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாடாமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட தோல்விகளின் விரக்தியை தயவுசெய்து பாராளுமன்றத்திற்குள் வெளிப்படுத்த வேண்டாம்.” என்று தெரிவித்தார். 

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இவற்றில் மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நேற்று (டிச.4) நடைபெற்றது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து