முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயல் மீட்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 400 பேர் சென்னை பயணம்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-3 2023-12-04

Source: provided

மதுரை : மதுரை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள தூய்மை பணியாளர்களை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் லி.மதுபாலன், இ.ஆ.ப.  ஆகியோர் நேற்று (04.12.2023) அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜம் புயலினால் மழை அதிகளவில் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், திருவள்ளுர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் சென்னை மாநகரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், வெள்ள நிவாரண பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவும் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் இருந்து சுமார் 400 தூய்மை பணியாளர்கள், 9 சுகாதார மேற்பார்வையாளர்கள், 4 சுகாதார ஆய்வாளர்கள் 1 சுகாதார அலுவலர் சென்னை பெருநகரத்திற்கு மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக 5 பேருந்துகளில் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அங்கிருந்து சென்னை, நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

இந்நிகழ்வில் மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ்சர்மா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலரகள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து