முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் எடுத்துரைத்தார். பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது.,

சென்னையில் இயல்புநிலை திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல்கட்டமாக ரூ.450 கோடி வழங்கிய பிரதமருக்கு நன்றி. புயல் நிவாரன நிதியாக முதல்கட்டமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து