முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயல் நிவாரண, மீட்பு பணிகளில் 18,400 காவலர்கள்: சென்னை காவல்துறை தகவல்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-3 2023-12-04

சென்னை, மிக்ஜம் புயல் நிவாரண, மீட்பு பணிகளில் 18,400 காவலர்கள் ஈடுபட்டள்ளதாக தெரிவித்துள்ள சென்னை காவல்துறை இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கிய 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னையில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் ஈடுபட்டதாகவும், 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டு, 21,967 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டதாகவும், தேங்கிய மழைநீரில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டதுடன், வயதான நபர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து