முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் 15 பேர் கைது

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
NIA 2023 04 25

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. நடத்திய திடீர் சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பான சந்தேகத்தின்பேரில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை பெரும்பாலும் தானே நகரத்தை சுற்றியே நடைபெற்றது. தானே மாவட்டத்தில் 31 இடங்களிலும், புனேவில் 2 இடங்களிலும் மற்றும் மீரா பயந்தரில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. நேற்றைய சோதனையில் 15 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து