முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி : சுவாமி நாராயண் கோவிலை திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி :  ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிரதமர்  மோடி 2 நாள் பயணமாக நாளை13-ம் தேதி செல்லவுள்ளார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்த போது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோவில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபுஅமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு வழங்கியது. 

இதையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தக் கோவில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோவிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. 

இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(பாப்ஸ்) அமைப்பு சார்பில் இந்த சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் கோவிலை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை 13-ம் தேதி மற்றும் 14-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அபுதாபியில் அமைந்துள்ள முதல் இந்துக் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாள் பயணத்தின் போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து