முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர் வாக்களிக்கவில்லை என்றால் குழந்தைகள் 2 நாள் சாப்பிட வேண்டாம் : மராட்டிய எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Mumbai 2024-02-11

Source: provided

மும்பை : மராட்டியத்தில் சிவசேனா   எம்.எல்.ஏ. ஒருவர்,  பெற்றோர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், 2 நாட்களுக்கு குழந்தைகளை சாப்பிட வேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

களம்நூரி தொகுதி எம்.எல்.ஏ.-வான சந்தோஷ் பாங்கர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்குச் சென்ற போது அங்குள்ள பள்ளி மாணவர்களிடம்  அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு சாப்பிட வேண்டாம் என்று கூறுவது போல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் 10 வயதுக்கும் குறைவான மாணவர்களிடம், அவர்கள் சாப்பிட மறுப்பதற்கான காரணம் குறித்து பெற்றோர்கள் கேள்வி கேட்டால், சந்தோஷ் பாங்கருக்கு வாக்களியுங்கள், அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம்  என்று பதில் சொல்லுங்கள் என்று பாங்கர் கூறுவதுபோல் உள்ளது. இது குறித்து  பாங்கர் மீது நடவடிக்கை எடுக்க  தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி  தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

பாங்கருக்கு இதுபோன்ற சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர், கடந்த மாதம், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு பண்டிகை பேரணியின்போது வாளைக்காட்டி மிரட்டியதாக களம்நூரி காவல் நிலைய போலீசரால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 2022-ம் ஆண்டில், தொழிலாளர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கேட்டரிங் மேலாளரை அவர் அறைந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து