முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கனவு அணியின் கேப்டனாக டோனி தேர்வு

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

புதுடெல்லி : ஐ.பி.எல் கனவு அணியின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணியில் இந்திய அணி கேப்டன் ரோகித்துக்கு இடம் இல்லை.

ரசிகர்கள் ஏராளம்...

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.க்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 17-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் டோனி...

இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து ஏறக்குறைய 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டிகளை வைத்து இந்த தொடரின் ஆல் டைம் பெஸ்ட் கனவு அணியை இவர்கள் தேர்வு செய்துள்ளனர். 

ரோகித் இல்லை...

இந்த அணிக்கு இந்தியா மற்றும் ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றிற்கு கேப்டனாக செயல்பட்டு பல கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்திய எம்.எஸ்.டோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐ.பி.எல்.தொடரில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த அணியில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல். கனவு அணி:

எம்.எஸ். டோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பொல்லார்ட், ரஷீத் கான், சுனில் நரின், யுஸ்வேந்திர சாஹல், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து