முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 15 பேர் பலி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

மெக்சிகோ சிட்டி:வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. அந்த திறந்தவெளி தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினார் தொழிலாளிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சிலர் தங்க சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இன்னும் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து