முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்த பகுஜன் எம்.பி., காங். எம்.எல்.ஏ.,க்கள்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

புதுடெல்லி : பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்து வருவது அதிகரித்து  வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய எம்.பி.,யான ரித்தேஷ் பாண்டே, நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். 

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத மக்கள் கட்சியைச் சேர்ந்த  தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

உ.பி., மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதி எம்.பி., யாக இருப்பவர் ரித்தேஷ் பாண்டே(42). பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவரது தந்தையும் உ.பி.,யில்  சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.எல்.ஏ., ஆக உள்ளார். இந்நிலையில், ரித்தேஷ் பாண்டே நேற்று பகுஜன் சமாஜ்  கட்சியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  பிரதமரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்தேன்  என்றார் 

லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழ்நிலையில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தேசியவாத மக்கள் கட்சியைச் சேர்ந்த  இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என மொத்தம் நான்கு பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் மூலம் 60 தொகுதிகளை கொண்ட  அருணாச்சல பிரதேச சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 56 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து