முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பாட்டம் விமர்சனம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Pampatam-review 2023-02-26

Source: provided

கதையின் நாயகன் இரட்டை வேடங்களில் கலக்கியிருக்கிறார்.பெரிய நாட்டையே ஆட்சி செய்யும் ராணி. அவரின் ஆஸ்தான ஜோதிடர் கணித்தபடி எச்சரிக்கையாக இருந்தும் மங்கம்மா தேவி (மல்லிகா ஷெராவத்) பாம்பு கடித்து இறந்து விடுகிறார். அவரின் மகள் இளவரசி நாகமணிக்கும் (சாய் ப்ரியா) இத்தகைய தோஷம் இருப்பதால் தந்தை பாம்புகளே இல்லாத நியூசிலாந்தில் மகளை அழைத்துச் சென்று வளர்க்கிறார்.

மகளும் வளர்ந்து மீண்டும் சமஸ்தானத்தற்கு திரும்பி வந்து நல்லாட்சி செய்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக இளவரசி மற்றும் மகாராஜா இருவரும் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும், அவர்களி;ன் ஆவி அரண்மனையை சுற்றி வருவதாகவும், உள்ளே செல்பவர்கள் பாம்பு கடித்து இறந்து விடுகிறார்கள் என்ற தகவல் பரவி அரண்மனைக்குள் ஊர் மக்கள் செல்லாமல் இருக்கின்றனர். இதனிடையே அரண்மனைக்குள்ளே வைரம், வைடூரியம், தங்க நகைகளின் புதையல் இருப்பதை அறிந்து கொள்ளையடிக்கும் கும்பல் உள்ளே செல்ல, அனைவரும் பாம்பு கடித்து இறந்து விடுகின்றனர்.

இந்த மரணங்களை விசாரிக்கவும் கண்டுபிடிக்கவும் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுகிறார். ஆனால் அவரின் மகன் தந்தையை காப்பாற்ற அவரை அடைத்து வைத்து விட்டு அந்த அரண்மனைக்குள் நுழைகிறார். அங்கே சரவணன் கண்ட அதிர்ச்சி கலந்த காட்சி எது? சரவணன் உயிரோடு திரும்பி வந்தாரா? தந்தை மாணிக்கவேல் தப்பித்து என்ன செய்தார்? அரண்மனைக்குள் அமானுஷ்ய சக்தி நடமாட்டம் உள்ளதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

முந்தைய காலகட்டத்தில் நடக்கும் மகாராணி ஆட்சி செய்த கதைக்களமாக படத்தை இயக்கியிருக்கிறார் வி.சி.வடிவுடையான். அதில் திகில், கொலை, அமானுஷ்ய சக்தி, பாம்பின் பழி வாங்குதல், விசாரணை, ஃபிளாஷ்பேக் காட்சிகள், இளவரசியின் வாழ்க்கை போராட்டத்துடன் திரைக்கதையமைத்து குழந்தைகள் காமிக் புக்கில் வருவது போல் கொடுத்துள்ளார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். இந்தப் படைப்பை எடுத்த இயக்குனருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து