முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
CM-3 2024-03-01

Source: provided

சென்னை : குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வரும்,  தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றஉ தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார்.  அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் கொண்டாடினர்.  இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;

வாக்களித்தோர்க்கும், வாக்களிக்கத் தவறியோர்க்கும் அரசின் திட்டங்கள் மூலம் சமமாய் ஒளிவீசும் திராவிடச் சூரியன்,  நம் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தோம்.  இனமானம் காப்போம்,  உரிமைகளை வெல்வோம், துவள மாட்டோம் – வீழ மாட்டோம் என நம் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதற்கு முன்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து