முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் : பா.ஜ.க.வுக்கு சித்தராமையா கோரிக்கை

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். 

பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடித்தது.  இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர்.  முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதன்பின் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான்.  குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.  முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்ஸில் வந்து டைமரை செட் செய்து குண்டு வெடிக்கச் வைத்துள்ளார்.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து