முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெலோசி, ஹாலே பெயர்களை மாற்றி பேசுவது ஏன்?: டிரம்ப் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      உலகம்
Trump 2024-02-17

Source: provided

வாஷிங்டன் : நிக்கி ஹாலே, பெலோசி  ஆகியோரது பெயர்களை மாற்றி பேசுவது ஏன் என்பது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். 

வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

அமெரிக்க தேர்தல் வழிமுறைப்படி, அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கட்சியினரிடம் உட்கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வென்றாக வேண்டும். குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர், நிக்கி ஹாலேவும் களம் இறங்கினார். 

ஆனால், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிரசாரங்களில் டிரம்ப், நிக்கி ஹாலேவை குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, 2007-ம் ஆண்டிலிருந்து 2011 வரை அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி  பெயரை குறிப்பிட்டு பேசியது விமர்சனத்திற்குள்ளானது.

அதை குறிப்பிட்டு மனதளவில் டிரம்ப் ஆரோக்கியமாக இல்லை  என நிக்கி ஹாலே விமர்சித்தார். நேற்று முன்தினம் இடாஹோ, மிசோரி, மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் உட்கட்சி தேர்தல்களில் டிரம்ப் வென்றார்.

இந்நிலையில் தென்கிழக்கு மாநிலமான வர்ஜினியாவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

நான் வேண்டுமென்றேதான் ஜோபைடன் பெயருக்கு பதிலாக ஒபாமா பெயரை குறிப்பிட்டு வந்தேன். அதே போல் ஒரு பறவை மூளைக்காரர் பெயருக்கு பதிலாக நான்சி பெலோசியின் பெயரையும் மாற்றி குறிப்பிட்டு வந்தேன். 

உங்களுக்கு யார் அந்த பறவை மூளைக்காரர்  (நிக்கி) என்பது தெரியும்.அவர்கள் இருவரையும் ஒன்றாகத்தான் கருதுகிறேன். ஒரே ஒரு வேற்றுமையை குறிப்பிட வேண்டுமென்றால், நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர். இவ்வாறு டிரம்ப் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து