முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் ரூ.56 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Modi

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் ரூ. 56 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். 

இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், 800 மெகாவாட் (பூனிட்-2) தெலுங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தை பெட்டபள்ளியில் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (அலகு -2) திட்டத்தையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில்,  பிரதமர் என்பவர் ஒரு பெரிய சகோதரனைப் போன்றவர் என்றும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை போல மற்ற மாநிலம் முன்னேறுவதற்கு அவரது ஆதரவு தேவை என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை என்றும், நல்லுறவை விரும்புவதாகவும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து