முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்      அரசியல்
Anna-Arivalayam-1

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில்,  தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொகுதிகளையும் இறுதி செய்து அதன் அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.  காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வி.சி.க.வுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை தி.மு.க. கட்சி ஒதுக்கியுள்ளது.  இதேபொல் சி.பி.ஐ.க்கு 2 தொகுதிகளும், சி.பி.எம். கட்சிக்கு 2 தொகுதிகளும், ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதியும், இ.யூ.மு.லீக்குக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

தி.மு.க. போட்டியிம் தொகுதிகள்:  

1) வடசென்னை, 2) தென்சென்னை, 3) மத்திய சென்னை, 4)  காஞ்சிபுரம் ( தனி), 5) அரக்கோணம், 6) வேலூர், 7) தருமபுரி, 8) திருவண்ணாமலை,

9) சேலம், 10) கள்ளக்குறிச்சி, 11)  நீலகிரி (தனி), 12) பொள்ளாச்சி, 13) கோவை, 14)  தஞ்சாவூர், 15)  தூத்துக்குடி, 16) தென்காசி (தனி), 17)  ஸ்ரீபெரும்புதூர், 18) பெரம்பலூர், 19) தேனி, 20) ஈரோடு, 21) ஆரணி இந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து