முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Modi 2023 07 30

புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபருக்கான தேர்தலில், விளாடிமிர் புதின் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனை மாஸ்கோவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தல் நடைமுறை பற்றி சில மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான சோதனையான காலத்தில், சிறந்த மற்றும் தனியுரிமை பெற்ற ராஜதந்திர நட்புறவை இன்னும் வலுப்படுத்த, வருகிற ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து