முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Modi 2023 07 30

சென்னை, தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலமாக உரையாடவுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, “நேற்று மாலை 5 மணிக்கு நமோ செயலி ஆப் வாயிலாக எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பாஜக தொண்டர்களுடனான ‘எனது பூத் வலிமையான பூத்’ உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது. தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகம் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நமோ செயலி மூலம் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, தமிழகம் வரும்போதெல்லாம் வணக்கத்துடன் தான் பேச்சை தொடங்கினாலும் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு. ஏனெனில் ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியை வணக்கம் சொல்லும் போது தொழிலாளிகளுக்குள் சொந்தம் என்ற உணர்வு ஏற்படும்.

என் வாழ்க்கையின் பெரும் பகுதியை, உங்களைப் போல ஒரு சாதாரண தொண்டனாகவே கழித்தேன்.உங்களின் கடினமான உழைப்பு கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். 'எனது பூத், வலிமையான பூத்' என்ற முழக்கத்திற்கு, உங்களின் கடின உழைப்பே காரணம்.நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக, நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் சென்ற போது மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பை பார்க்க முடிந்தது, இப்படிப்பட்ட தொண்டர்களை பெற்றதை பெருமையாக உணர்ந்தேன்.தொண்டர்களின் கடின உழைப்பால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது. என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து