எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக்கில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் படையினரால் முன்னறிவிப்பு எதுவுமின்றி சுட்டு கொல்லப்பட்டனர்.
பொதுமக்களுடைய சுதந்திர நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வகை செய்கிற, காலனி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்க கூடிய, ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடி வந்த போது, இந்த கொடூர படுகொலை சம்பவம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண், பெண் பேதமின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜாலியன்வாலாபாக்கில் தாய்நிலத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
சுயராஜ்ஜியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து பேராத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடன்பட்டுள்ளனர். வீரமரணம் அடைந்தவர்களின் நாட்டுப்பற்றுக்கான மனவுறுதியானது, வருங்கால தலைமுறையை எப்போதும் ஊக்கப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஜாலியன்வாலாபாக் படுகொலை நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நாடு முழுவதுமுள்ள என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சார்பில், வீரமரணம் அடைந்த அனைவருக்கும் மனதின் ஆழத்தில் இருந்து என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தின் போது ஈடுஇணையற்ற தைரியம் மற்றும் தியாகம் ஆகியவற்றை மக்கள் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றையும் அந்த பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |