முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து குமரியில் அமித்ஷா ரோடு ஷோ

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Amit-Shah 2024-04-13

Source: provided

கன்னியாகுமரி : பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து குமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சர் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அதன் ஒரு பகுதியாக தக்கலை பகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்றார்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில், சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்து அமித்ஷாவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது;- "தமிழ் பண்பாடு, மரியாதையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து பா.ஜ.க.வை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அயோத்தி ராமர் கோவில், சனாதன தர்மம் ஆகியவற்றை அவதூறாக பேசி தி.மு.க. இந்துக்கள் மனதைக் காயப்படுத்தியது. பா.ஜ.க. வெல்லும் 400 இடங்களில் பொன்.ராதாகிருஷ்ணனுடையதும் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து