எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |