முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprata-Saku

Source: provided

சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்  65 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., தமிழகத்தில் 44,800 ஓட்டுச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது. நாட்டில் தமிழகத்தில் மட்டுமே மிக அமைதியாக தேர்தல் நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் இன்று (ஏப்.18) வரை தபால் ஓட்டு செலுத்தலாம். தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் ஒவ்வொரு ஓட்டும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். மக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று இன்று மாலை 6 மணி வரை தபால் ஓட்டு அளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் ஓட்டுச்சாவடி விவரங்களை அறியலாம். ஓட்டுச்சாவடி விவரங்களை அறிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் ஓட்டுச்சாவடி விவரங்களை அறியலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து