முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.

நாட்டில் இன்று முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, தாமரை சின்னத்தில் ஒரு முறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் விழுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது தொடர்பாக கேரள ஊடகங்களில் வெளியான செய்திகளை மனுதாரர்களில் ஒருவரான ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மேற்கோள்காட்டினார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், அந்த செய்திகளில் உண்மையில்லை என்றும், பொய்யான தகவல்கள் என்றும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கொடுத்தது. இந்த வழக்கில், மனுதாரர் தரப்பிலும், தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், விவிபேட் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நேற்று விசாரணை நிறைவு பெற்ற நிலையில், விவிபேட் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து