முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  

33-வது லீக் போட்டி...

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஐதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத்,  லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இந்நிலையில், 33வது லீக் போட்டி பஞ்சாபில் உள்ள மைதானத்தில்  இரவு 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

சூர்யகுமார் யாதவ்...

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது.  முதலில் ரோஹித் சர்மா – இஷாந்த் கிஷன் இணை களமிறங்கினர்.  இதில் 3வது ஓவரிலேயே  8 ரன்கள் எடுத்து இஷாந்த் அவுட்டானார்.  அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 78 ரன்களில் அவுட்டானார்.

ரோகித் 36 ரன்கள்...

36 ரன்களில் ரோகித் அவுட்டானார்.  அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  டிம் டேவிட் 14 ரன்களில் வெளியேற,  ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்களில் அவுட்டானார்.  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 192 ரன்களை குவித்துள்ளது.  அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்களை விளாசியுள்ளார்.  ரோகித் சர்மா 25 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார்.  மும்பை அணி தரப்பில் சேம் கரண் 2 விக்கெட்டுகளையும்,  ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் காகிசோ ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பஞ்சாப் தோல்வி...

இதையடுத்து,  பஞ்சாப் கிங்ஸ்  அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கியது.  பஞ்சாப் கிங்ஸ் அணி  19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது.  இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.  பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக அசுடோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்களையும், சஷாங் சிங் 25 பந்துகளில் 41 ரன்களையும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து