முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Ooty-train-2023-12-14

ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ம் தேதி மலை ரயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. 

சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. 

இது குறித்து ரயில்வே ஊழியர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று ஒருநாள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக  சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலை ரயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து