முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிம் முதல்வராக 2-வது முறை பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Prem-Singh-Tamang 2024-05-1

சிக்கிம், சிக்கிம் முதல்வராக 2-வது முறை பிரேம் சிங் தமாங் நேற்று பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. 

இமயமலையை ஒட்டிய வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் 2024 மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் அங்கு ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

மொத்தம் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் எஸ்.கே.எம். மீண்டும் ஆட்சியமைக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்தில் மற்றோரு மாநிலக் கட்சியான எஸ்.டி.எப். வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக எஸ்.கே.எம். கட்சித் தலைவர் பிரேம் சிங் தாமங் 2 வது முறையாக மீண்டும் சிக்கிம் முதல்வராக பதவி ஏற்றார்.

நேற்று மாலை 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் பிரேம் சிங்கிற்கும் புதிய அமைச்சர்களுக்கும் சிக்கிம் கவர்னர் லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ள பால்ஜோர் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 30,000 பேர் பங்கேற்றனர்.  சிக்கிமில் 1 மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ள நிலையில் அதிலும் எஸ்.கே.எம். கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து