முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் தாக்குதல் : பாதுகாவலர் ஒருவர் காயம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Brain-Singh 2023 06 10

Source: provided

இம்பால் : மணிப்பூர் முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியதில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேற்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்வர்யின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர் நேற்று இம்பாலில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியான ஜிரிபாம் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

காங்போப்கி மாவட்டம் கே.சினாம் கிராமம் அருகே சென்றபோது, சாலையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் எல்லையோரம் அமைந்துள்ள காங்போப்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்வர் கேட்டுள்ளார்.

ஜிரிபாம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் டி.ஜி.பி.க்கு முதல்வர் அலுவலகம் பலமுறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து