முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு முதல் பதக்கம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      விளையாட்டு
INDIA 2024-05-15

Source: provided

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின் காஸானில் கடந்த 12-ஆம் தேதி பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், அதில் 90 நாடுகளை சேர்ந்த 47க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ரஷியாவில் நடைபெறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 

மகளிர் குழுவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம், தற்போது ஒரேயொரு பதக்கம் மட்டுமே வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 21-வது இடத்தில் உள்ளது. பதக்கப்பட்டியலில் 42 தங்கம், 26 வெள்ளி, 15 வெண்கலத்துடன் ரஷியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் 2-வது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும் உள்ளன. டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

________________________________________________________________

கோலி மீது துபே நம்பிக்கை

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று இன்னிங்ஸ் ஆடி 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் துபே. இந்நிலையில், வரும் போட்டியில் கோலி ரன் குவிப்பார் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்து வருகிறார் விராட் கோலி. 

உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள அவர், முறையே 1, 4 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 741 ரன்களை குவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் அவரா இது என்ற கேள்வி அவரது ஆட்டத்தை பார்க்கும் போது எழவே செய்கிறது. “கோலி குறித்து பேச நான் யார்? அவர் முதல் மூன்று போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் அவர் மூன்று சதங்கள் விளாசலாம். அப்போது இந்த விவாதங்கள் எழாது” என துபே தெரிவித்துள்ளார். 

____________________________________________________________________

டோனிக்கு கனடா வீரர் புகழாரம்

கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர். இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் 1996-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 2011-ம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடும்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்தில் 52 ரன்கள் விளாசினார்.

____________________________________________________

சிக்கலில் பாக். வீரர்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான போட்டி "டை"யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில தலைவர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி-க்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி தோல்விக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், வீரர்கள் அவர்களுக்கான மத்திய ஒப்பந்த மறுஆய்வு, சம்பளம், போட்டிக்கான கட்டணம் குறைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து