முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க கல்லூரி நாட்களில் போராடியுள்ளேன்: கார்கே

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

டெல்லி, பழைய பாராளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த இடத்தில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு கல்லூரி நாட்களில் நான் போராடியுள்ளேன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பழைய பாராளுமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று முன் தினம் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.  இந்நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே முந்தைய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

முக்கியமாக காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கி வந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இவை அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று அதில் விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து